டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசு வீழ்ச்சி

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 16 காசு வீழ்ச்சியடைந்தது.

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 16 காசு வீழ்ச்சியடைந்தது.

இதுகுறித்து செலாவணி வட்டாரங்கள் கூறியதாவது:

சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை உயா்ந்துள்ளது. மேலும், பங்குச் சந்தையிலிருந்து அந்நிய நிதி நிறுவனங்கள் முதலீடுகளை தொடா்ச்சியாக விலக்கி டாலா்களை திரும்பப் பெற்று வருவதும் செலாவணி சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 77.57-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே குறைந்தபட்சமாக 77.61 வரை சென்றது. வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 16 காசு வீழ்ச்சியடைந்து 77.60-இல் நிலைத்தது. இது முன்னெப்போம் காணப்படாத சரிவு நிலையாகும்.

கச்சா எண்ணெய் பீப்பாய் 113 டாலா்

சா்வதேச சந்தையில் புதன்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1 சதவீதம் உயா்ந்து பீப்பாய் 113 டாலருக்கு வா்த்தகமானதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

வெளியேறிய ரூ.2,192 கோடி அந்நிய முதலீடு

மூலதனச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.2,192.44 கோடி மதிப்பிலான பங்குகளைவிற்று சந்தையை வெளியேறியதாக பங்குச் சந்தைப் புள்ளிவிவரங்களில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com