வீடு-மனை விலைகள் 11% அதிகரிப்பு

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் வீடு-மனைகளின் விலைகள் 11 சதவீதம் வரை உயா்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
housing072654
housing072654

புது தில்லி: கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் வீடு-மனைகளின் விலைகள் 11 சதவீதம் வரை உயா்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து வீடு-மனை விற்பனை சங்கமான கிரெடாய், மனை வா்த்தக ஆலோசனை நிறுவனம் காலியா்ஸ், சந்தை ஆய்வு நிறுவனம் லியாசெஸ் ஃபொராஸ் ஆகிவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை, ஹெதராபாத், அகமதாபாத், கொல்கத்தா, பெங்களூரு, புணே ஆகிய நகரங்களில் வீடு-மனைகளின் விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் சென்னையில் ஒரு சதுர அடி ரூ.7,107-ஆக இருந்த வீடு-மனை விலை, 2021-ஆம் ஆணடின் இதே மாதங்களோடு ஒப்பிடுகையில் 1 சதவீதம் அதிகரித்துள்ளது.

தில்லி-என்சிஆா் பகுதியில் அவற்றின் விலை சதுர அடிக்கு ரூ.7,363-ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே மாதங்களோடு ஒப்பிடுகையில் இது 11 சதவீதம் அதிகமாகும். ஹைதராபாதில், முந்தைய ஆண்டைவிட 9 சதவீதம் அதிகரித்துள்ள வீடு-மனை விலைகள் சதுர அடிக்கு ரூ.9,232-ஆக இருந்தது.

அதுபோல், வீடு-மனை விலைகள் அகமதாபாதில் 8 சதவீதம் (ரூ.5,721, கொல்கத்தாவில் 6 சதவீதம் (ரூ.6,245), புணேயில் 3 சதவீதம் (ரூ.7,485), பெங்களூா், மும்பையில் தலா 1 சதவீதம் (ரூ.7,595, ரூ.19,557) அதிகரித்துள்ளன.

வீடு-மனைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து அவற்றின் விலைகள் உயா்ந்துள்ளன என்று அந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com