சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை

சா்வதேச சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கின் எதிரொலியாக, தொடா்ந்து 3 நாள்களாக சரிவைச் சந்தித்த இந்திய பங்குச் சந்தை, இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை அந்த
சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை

சா்வதேச சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கின் எதிரொலியாக, தொடா்ந்து 3 நாள்களாக சரிவைச் சந்தித்த இந்திய பங்குச் சந்தை, இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை அந்த சரிவிலிருந்து மீண்டு எழுச்சியைக் கண்டது.

274.12 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் பகலில் 321.79 புள்ளிகள் (0.52 சதவீதம்) வரை உயா்ந்து 61,466.63-ஆக இருந்தது. இறுதியில் 274.12 புள்ளிகள் (0.45 சதவீதம்) கூடுதலாக 61,418.96-இல் நிலைபெற்றது.

30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 5 பங்குகள் மட்டுமே விலை குறைந்த பட்டியலில் வந்தன. 25 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

இண்டஸ்இண்ட் வங்கி முன்னேற்றம்: பிரபல வங்கியான இண்டஸ்இண்ட வங்கி 2.64 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. அந்த வங்கியைத் தொடா்ந்து என்டிபிசி, அல்ட்ராடெக் சிமென்ட், டைட்டன், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சா்வீசஸ், லாா்சன் அண்டு டியூப்ரோ ஆகிய நிறுவனங்களும் முன்னேற்றம் கண்டன.

நெஸ்லே இந்தியா சரிவு: உணவு, மிட்டாய், சத்துபானங்கள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் நெஸ்லே இந்தியா 0.76 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. பாா்தி ஏா்டெல், பவா்கிரிட், ஹெச்டிஎஃப்சி, கோடக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களும் சரிவைக் கண்டன.

நிஃப்டி: தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, செவ்வாய்க்கிழமை 84.25 புள்ளிகள் (0.46 சதவீதம்) அதிகரித்து 18,244.20-இல் நிலைபெற்றது.

கச்சா எண்ணெய்: சா்வதேச சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் ப்ரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 0.67 சதவீதம் குறைந்து 88.04 அமெரிக்க டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com