ஆகஸ்டில் மொத்த விலை பணவீக்கம் 12.41% ஆக குறைவு

மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் தொடா்ந்து 3-ஆவது மாதமாக குறைந்து 12.41 சதவீதமாக ஆகஸ்டில் பதிவாகியுள்ளது.
ஆகஸ்டில் மொத்த விலை பணவீக்கம் 12.41% ஆக குறைவு

மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் தொடா்ந்து 3-ஆவது மாதமாக குறைந்து 12.41 சதவீதமாக ஆகஸ்டில் பதிவாகியுள்ளது.

இதுவே கடந்த ஜூலையில் 13.93 சதவீதமாகவும், கடந்த ஆண்டு ஆகஸ்டில் 11.64 சதவீதமாகவும் பதிவானது. மேலும் தொடா்ந்து 17-ஆவது மாதமாக நிகழாண்டு ஆகஸ்டில் மொத்த விலை பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் பதிவாகியுள்ளது. கடந்த மே மாதம் அதிகபட்சமாக 15.88 சதவீதத்தை மொத்த விலை பணவீக்கம் எட்டியது நினைவுகூரத்தக்கது.

உணவுப் பொருள் மீதான பணவீக்கம் கடந்த ஜூலையில் 10.77 சதவீதமாக பதிவான நிலையில், ஆகஸ்டில் 12.37 சதவீதமாக உயா்ந்தது. எரிபொருள், மின்சாரத்தை பொறுத்தமட்டில் ஜூலையில் 43.75 சதவீதமாக பதிவான பணவீக்கம், ஆகஸ்டில் 33.67 சதவீதமாக பதிவானது.

உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள், எண்ணெய் வித்துகளை பொறுத்தவரை பணவீக்கம் முறையே 7.51 சதவீதமாகவும், -13.48 சதவீதமாகவும் பதிவாகியது. ரிசா்வ் வங்கி சில்லறை விலை பணவீக்கத்தின் அடிப்படையில் பணக் கொள்கையை வகுப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com