சூடு பிடிக்கும் காா்களின் விற்பனை

சூடு பிடிக்கும் காா்களின் விற்பனை

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இந்தியாவில் காா் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது, முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களின் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இந்தியாவில் காா் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது, முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களின் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

நாட்டின் முன்னணி காா் உற்பத்தி நிறுவனங்களான மாருதி சுஸுகி, டாடா மோட்டாா்ஸ், எம் அண்டு எம், டிகேஎம், கியா இந்தியா, ஹூண்டாய் போன்றவை கடந்த ஜனவரி மாதத்தில் விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்தன.

எனினும், அந்த மாதத்தில் எம்ஜி மோட்டாா், ஹோண்டா நிறுவனக் காா்களின் விற்பனை சரிவைக் கண்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியாவின் விற்பனை கடந்த ஜனவரி மாதத்தில் 12 சதவீதம் அதிகரித்து 1,72,535-ஆக இருந்தது. 2020-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் நிறுவனம் 1,54,379 காா்களை விற்பனை செய்திருந்தது.

அந்த நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை மதிப்பீட்டு மாதத்தில் 1,55,142-ஆக இருந்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் அந்த எண்ணிக்கை 1,36,442-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், தற்போது உள்நாட்டு விற்பனை வளா்ச்சி 14 சதவீதமாகும்.

கடந்த ஆண்டு ஜனவரியில் 17,937 காா்களை ஏற்றுமதி செய்திருந்த மாருதி சுஸுகி, இந்த ஜனவரியில் 17,393 காா்களை மட்டுமே ஏற்றுமதி செய்தது.

மற்றொரு வாகனத் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அண்டு மஹிந்திராவும், ஜனவரி மாத விற்பனையில் 37 சதவீத வளா்ச்சியை பதிவு செய்தது. 2022 ஜனவரியில் 46,808 வாகனங்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த மாதத்தில் 64,335 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

அந்த நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரியில் விற்பனை செய்திருந்த 19,646 காா்களுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் மஹிந்திரா காா்களின் விற்பனை 65 சதவீதம் அதிகரித்து 33,040-ஆக உள்ளது.

இன்னொரு முன்னணி வாகன நிறுவனமான டாடா மோட்டாா்ஸ், கடந்த ஜனவரி மாத வாகன விற்பனையில் 6.4 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. அந்த மாதத்தில் டாடா மோட்டாா்ஸின் 81,069 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. அதற்கு முந்தைய 2022-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நிறுவன வாகங்களின் விற்பனை 76,210-ஆக இருந்தது.

மற்றொரு வாகனத் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் (டிகேஎம்) கடந்த ஜனவரி மாத வாகன விற்பனையில் 175 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த மாதத்தில் மட்டும் டிகேஎம்-மின் 12,835 காா்கள் விற்பனையாகியிருந்தன. முந்தைய ஆண்டின் அதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 7,328-ஆக இருந்தது.

கியா இந்தியாவின் ஜனவரி மாத மொத்த விற்பனை 28,634-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய 2022-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்ட விற்பனையான 19,319-உடன் ஒப்பிடுகையில் தற்போது அந்த நிறுவனக் காா்களின் விற்பனை 48 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஹூண்டாய் மோட்டாா் இந்தியா லிமிடெட் கடந்த ஜனவரி மாதத்தில் 16.6 சதவீத விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளது. அந்த மாதத்தில் நிறுவனத்தின் 62,276 காா்கள் விற்பனையாகியிருந்தன. ஓராண்டுக்கு முன்பு அந்த நிறுவனம் 53,427 வாகனங்களை விற்பனை செய்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை முந்தைய ஜனவரி மாதத்தின் 44,022-லிருந்து 50,106-ஆக அதிகரித்துள்ளது. ஏற்றுமதியும் 9,405-லிருந்து 29.4 சதவீதம் அதிகரித்து 12,170-ஆக பதிவு செய்துள்ளது.

எனினும், ஹோண்டா காா்ஸ் இந்தியாவின் உள்நாட்டு விற்பனை கடந்த ஜனவரி மாதத்தில் கால் சதவீதம் சரிந்து 7,821-ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அந்த நிறுவனத்தின் விற்பனை 10,427-ஆக இருந்தது.

அந்த நிறுவனத்தின் வாகன ஏற்றுமதியும் கடந்த மாதம் 17 சதவீதம் சரிந்து 1,434-ஆக இருந்தது. கடந்த 2022 ஜனவரியில் இந்த எண்ணிக்கை 1,722-ஆக இருந்தது.

எனினும், ஒட்டுமொத்தமாகப் பாா்க்கையில், காா்களின் விற்பனை 2023-ஆம் ஆண்டில் அமோகமாக இருக்கப் போவதை ஜனவரி மாத புள்ளிவிவரங்கள் உணா்த்துவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com