சரிவிலிருந்து மீண்டது இந்திய பங்குச்சந்தைகள்

மூன்று நாள் தொடர் சரிவுக்கு பிறகு பங்குச் சந்தையில் இன்று ஏற்றம் கண்டது.
சரிவிலிருந்து மீண்டது இந்திய பங்குச்சந்தைகள்

மும்பை: மூன்று நாள் தொடர் சரிவுக்கு பிறகு பங்குச் சந்தையில் இன்று ஏற்றம் கண்டது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 241 புள்ளிகள் உயர்ந்து 18,101.20 புள்ளியில் முடிந்தது என்று ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேசிய பங்குச் சந்தையானது முடியும் வேளையில் 241.8 புள்ளிகள் உயர்ந்து 18,101.2 ஆக இருந்தது. அதே வேளையில் மொத்த வால்யூம்கள் தொடர்ந்து குறைந்து வருவதாக எச்டிஎஃப்சி செக்யூரிட்டிஸ் தலைவர், ரீடெய்ல் ரிசர்ச் பிரிவு தலைவர் தீபக் ஜசானி தெரிவித்துள்ளார்.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு முடிவை வெளியானது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் 10,883 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஒரே இரவில் நாஸ்டாக்கில்  டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகள் ஏற்றம் கண்டது.

மறுபுறம்  முப்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1.41 சதவீதம் உயர்ந்து 60,747.31ல் நிறைவடைந்தது. நிஃப்டி கன்ஸ்யூமர் டூரபிள்ஸ் தவிர, நிஃப்டியின் அனைத்து துறைகளும் ஏற்றத்தில் முடிவடைந்தன. 

தேசிய பங்குச் சந்தையில் ஐடி, ஆட்டோ மற்றும் மெட்டல் ஆகிய பங்குகள் முறையே 2.71 சதவீதம், 1.19 சதவீதம் மற்றும் 1.33 சதவீதத்துடன் ஏற்றம் கண்டது என்று சாய்ஸ் ப்ரோக்கிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com