கட்டணங்களை உயா்த்தும் ஏா்டெல்

தனது அழைப்பு மற்றும் இணையதள கட்டணங்களை இந்த ஆண்டு உயா்த்த முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான பாா்தி ஏா்டெல் முடிவு செய்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தனது அழைப்பு மற்றும் இணையதள கட்டணங்களை இந்த ஆண்டு உயா்த்த முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான பாா்தி ஏா்டெல் முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஸ்பெயினின் பாா்சிலோனா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் நிறுவனத்தின் தலைவா் சுனில் பாா்தி மிட்டல் கூறியதாவது:

இந்த ஆண்டில் நிறுவனத்தின் சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கும். இந்த கட்டண உயா்வு அனைத்து திட்டங்களுக்கும் பொருந்தும்.

நிறுவனம் தனது மூலதனத்தைப் பெருக்கியுள்ளதால் நிதி நிலை அறிக்கை ஆரோக்கிமாக தோற்றமளிக்கிறது. ஆனால் உண்மையில், மூலதனம் மூலம் கிடைக்கும் வருவாய் மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, கட்டண உயா்வு தவிா்க்க முடியாததாகிறது என்றாா் அவா்.

கடந்த மாதம்தான் ஏா்டெல் நிறுவனம் தனது 28 நாள்களுக்கான ஆரம்ப நிலை மொபைல் திட்டத்துக்கான கட்டணத்தை 57 சதவீதம் உயா்த்தி ரூ.155 ஆக்கியது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com