விற்பனையில் சாதனை படைத்த மெர்சிடிஸ், ஆடி ரக கார்கள்!

நாட்டில் உயர்தர கார்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனங்களான மெர்சிடிஸ் மற்றும் ஆடி இந்த பண்டிகை காலத்தில் விற்பனையில் சாதனை படைத்துள்ளன.
விற்பனையில் சாதனை படைத்த மெர்சிடிஸ், ஆடி ரக கார்கள்!


புதுதில்லி: நாட்டில் உயர்தர கார்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனங்களான மெர்சிடிஸ் மற்றும் ஆடி இந்த பண்டிகை காலத்தில் விற்பனையில் சாதனை படைத்துள்ளன.

இது குறித்து மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் சந்தோஷ் ஐயர் தெரிவித்ததாவது:

பல புதிய அறிமுகங்கள், கவர்ச்சிகரமான போர்ட்ஃபோலியோ மற்றும் வலுவான வாடிக்கையாளர் உணர்வு காரணமாக இந்த ஆண்டு ஓணம் முதல் தீபாவளி வரையிலான பண்டிகை காலம் கடந்த ஆண்டை விட விற்பனையில் சிறப்பாக உள்ளது.

தசரா, தந்தேராஸ் மற்றும் தீபாவளியின் போது வாடிக்கையாளர்களின் உற்சாகத்தை பிரதிபலிக்கும் சாதனை டெலிவரிகளை நாங்கள் கண்டோம். ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து நேர்மறையான தொழில் கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளதால்,  இந்த ஆண்டு விற்பனையைில் சாதனை படைப்போம் என்றார்.  அதே வேளையில், வரும் மாதங்களிலும் விநியோக சங்கிலி தொடர்பான இடையூறுகள் தொடரும் என்று நாங்கள் கணித்துள்ளோம்.

ஆடி இந்தியா தலைவர் பல்பீர் சிங் தில்லான் கூறுகையில் 2023 ஜனவரி முதல் செப்டம்பர் மாதங்களில் 5,530 யூனிட்கள் விற்பனை செய்து 88 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும், கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆடி இந்தியா அதிக அளவில் விற்பனை செய்துள்ளதால், இந்த பண்டிகைக் காலம் ஆடி இந்தியா நிறுவனத்திற்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்தது.

ஏ 4, க்யூ 3, க்யூ 3 ஸ்போர்ட்பேக், க்யூ 5 மற்றும் எஸ் 5 ஸ்போர்ட்பேக் உள்ளிட்ட மாடல்களின் தேவையின் பின்னணியில் நிலையான வளர்ச்சி உள்ள அதே வேளையில் பண்டிகை காலத்தில் புதுதில்லி மற்றும் மும்பை விற்பனையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன. அதனை தொடர்ந்து ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களிலிலும் எங்கள் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 

இந்தியாவில் ஆடம்பர கார் விற்பனையானது 2018ம் ஆண்டின் விற்பனை மிஞ்சும் என்ற நிலையில், இந்த ஆண்டு சுமார் 46,000 முதல் 47,000 யூனிட் வரை விற்பனையாகும் என்றார் பல்பீர் சிங் தில்லான்.

பிஎம்டபிள்யூ குழுமத்தின் இந்திய தலைவர் விக்ரம் பவா கூறுகையில், பண்டிகை காலத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பிரிவுகளில் பல சக்திவாய்ந்த மாடல்களை சந்தையில் நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

லம்போர்கினி இந்தியா தலைவர் ஷரத் அகர்வால் கூறுகையில், உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்திய ஆடம்பர கார் சந்தையின் மதிப்பு 2021 ஆம் ஆண்டில் 1.06 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. அது 2027ஆம் ஆண்டில் 1.54 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2022முதல் 2027 முன்னறிவிப்பு காலத்தில் 6.4 சதவிகிதத்திற்கும் அதிகமான இருக்கும் என்றார்.

இந்த வளர்ச்சி வாடிக்கையாளர் ரசனை மற்றும் விருப்பங்களின் பரிணாமத்தால் உந்தப்படுகிறது. எனவே மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ஆடம்பர கார்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் ஆட்டோமொபைல் பிரிவு கணிசமான வளர்ச்சி காண்கிறது என்றார் அகர்வால்.

லம்போர்கினியைப் பொறுத்தவரை, இன்று 25 சதவிகிதத்திற்கும் அதிகமான விற்பனை மெட்ரோ அல்லாத நகரங்களிலிருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 17 முதல் நவம்பர் 14 வரை உள்ள 89 நாட்கள் பண்டிகை காலத்தில் ஒட்டுமொத்த பயணிகள் வாகன சில்லறை விற்பனை 10 லட்சத்தை தாண்டிய நிலையில், கடந்த ஆண்டில் 71 நாட்கள் நடைபெற்ற பண்டிகை காலத்தில் சுமார் 8.10 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com