அந்நிய செலாவணி வர்த்தக தளங்களை எச்சரிக்கைப் பட்டியலில் இணைத்த ரிசர்வ் வங்கி!

எஃப்எக்ஸ் ஸ்மார்ட்புல், ஜஸ்ட் மார்க்கெட்ஸ் உள்ளிட்ட 19 நிறுவனங்களைச் சேர்ப்பதன் மூலம் அங்கீகரிக்கப்படாத அந்நிய செலாவணி வர்த்தக தளங்களை எச்சரிக்கைப் பட்டியலை ரிசர்வ் வங்கி இன்று புதுப்பித்தது.
அந்நிய செலாவணி வர்த்தக தளங்களை எச்சரிக்கைப் பட்டியலில் இணைத்த ரிசர்வ் வங்கி!

மும்பை: எஃப்எக்ஸ் ஸ்மார்ட்புல், ஜஸ்ட் மார்க்கெட்ஸ் மற்றும் கோடோ எஃப்எக்ஸ் உள்ளிட்ட 19 நிறுவனங்களை அங்கீகரிக்கப்படாத அந்நிய செலாவணி வர்த்தக தளங்களை எச்சரிக்கைப் பட்டியலை ரிசர்வ் வங்கி இன்று புதுப்பித்ததால், அதன் மொத்த எண்ணிக்கையை தற்போது 75ஆக உயர்ந்தது.

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999-இன் கீழ் அந்நியச் செலாவணியைக் கையாளவோ அல்லது மின்னணு வர்த்தக தளங்கள் வழிகாட்டுதல்கள், 2018-இன் கீழ் அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகளுக்கான மின்னணு வர்த்தக தளத்தை இயக்கவோ அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் பெயர்கள் அடங்கிய எச்சரிக்கை பட்டியல் வெளியானது.

அட்மிரல் மார்க்கெட், பிளாக்புல், ஈஸி மார்க்கெட்ஸ், என்க்ளேவ் எஃப்எக்ஸ், ஃபினோவிஸ் ஃபின்டெக், எஃப்எக்ஸ் ஸ்மார்ட்புல், எஃப்எக்ஸ் ட்ரே மார்க்கெட், ஃபோர்க்ஸ்4யூ, குரோவிங் கேப்பிடல் செர்விக்ஸ் மற்றும் எச்எஃப் மார்க்கெட்ஸ் ஆகியவையும் மற்ற நிறுவனங்களான எச்.ஒய்.சி.எம். கேப்பிடல் மார்க்கெட், ஜே.ஜி.சி.எஃப்.எக்ஸ், பி.யு. பிரைம், ரியல் கோல்டு கேபிடல், டி.என்.எஃப்.எக்ஸ், யா மார்க்கெட்ஸ், மற்றும் கேட் டிரேட் ஆகியவை இதில் அடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com