அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 4வது நாளாக சரிவடைந்து பிறகு இன்று 9 காசுகள் சரிந்து ரூ.83.22 ஆக நிறைவடைந்தது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி!

மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 4வது நாளாக சரிவடைந்து பிறகு இன்று 9 காசுகள் சரிந்து ரூ.83.22 ஆக நிறைவடைந்தது.

இருப்பினும், உள்நாட்டு பங்குச் சந்தைகளில் காணப்பட்ட சாதகமான போக்கு, ரூபாயின் மதிப்புக்கு சற்று ஏற்றம் அளித்ததாக, அன்னிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் இந்த ஆண்டு டிசம்பர் வரை விநியோகக் குறைப்பை நீட்டிக்க ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 90 டாலரைத் தாண்டியது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ.83.15ல் தொடங்கி பிறகு ரூ.83.12 முதல் 83.22 வரை வர்த்தகமானது. இது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ.83.22-ஆக முடிவடைந்தது. அதே வேளையில் நேற்று (புதன்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ.83.13-ஆக இருந்தது.

சர்வதேச நிலையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 0.39 சதவீதம் குறைந்து 90.25 டாலராக வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 385.04 புள்ளிகள் உயர்ந்து 66,265.56 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை 116 புள்ளிகள் உயர்ந்து 19,727.05 புள்ளிகளாகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com