ஏப்ரல் - டிசம்பர் காலத்தில் அந்நிய நேரடி முதலீடு 15% குறைவு!

இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 15 சதவீதம் குறைந்து 36.75 பில்லியன் டாலராக உள்ளது என்று தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்
ஏப்ரல் - டிசம்பர் காலத்தில் அந்நிய நேரடி முதலீடு 15% குறைவு!


புதுதில்லி: இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 15 சதவீதம் குறைந்து 36.75 பில்லியன் டாலராக உள்ளது என்று தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் அந்நிய நேரடி முதலீடு 43.17 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 

பங்கு வரவு, மறு முதலீட்டு வருவாய் மற்றும் இதர மூலதனம் ஆகியவற்றை உள்ளடக்கிய மொத்த அந்நிய நேரடி முதலீடுகள், நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாதங்களில் 55.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டு 60.4 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

ஏப்ரல் முதல் டிசம்பர் 2022-23ம் ஆண்டில் சிங்கப்பூர் நாடானது 13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அந்நிய நேரடி முதலீடு பெற்று முதலிடத்தைப் பிடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com