தொழில்நுட்பத் துறையின் வருவாய் நடப்பு நிதியாண்டில் ரூ.25,400 கோடி டாலர் எட்டும்: நாஸ்காம்

நிதியாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி: நாஸ்காம் முன்னோக்கி
நாஸ்காம்
நாஸ்காம்

மும்பை: நடப்பு நிதியாண்டில், தொழில்நுட்பத் துறையின் வருவாய், 3.8 சதவிகிதம் அதிகரித்து, ரூ.25,400 கோடி டாலராக உயரும் என தொழில் துறையைச் சேர்ந்த நாஸ்காம் தெரிவித்துள்ளது.

மென்பொருள் தவிர்த்து, வருவாய் ரூ.19,900 கோடி அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது கடந்த நிதியாண்டு 2023ஐ விட 3.3 சதவிகிதம் வளர்ச்சியாகும்.

பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறை மட்டும் 2024 நிதியாண்டில் மொத்த ஏற்றுமதி வருவாயில் 48 சதவிகித பங்களிப்பை வழங்கியுள்ளது என்று நாஸ்காம் தனது வருடாந்திர மதிப்பாய்வில் தெரிவித்துள்ளது.

உலகளவில் 2023ஆம் ஆண்டில் தொழில்நுட்ப செலவினங்களில் 50 சதவிகித சரிவு மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தங்களில் 6 சதவிகித சரிவு இருந்த போதிலும் கணிக்கப்பட்ட 3.8 சதவிகித வளர்ச்சி உள்ளது.

அதாவது, இந்த நிதியாண்டில் தொழில்துறை 9.3 பில்லியன் டாலர் வருவாயை அதிகரித்துள்ளது என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது.

ஆட்குறைப்பு பற்றிய அறிக்கைகள் இருந்தபோதிலும், தொழில்துறையில் 60,000 புதிய நபர்களை இணைத்துக் கொண்டு மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை இந்த ஆண்டில் 54.3 லட்சமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com