தங்கம் விலை ரூ.250 சரிந்து விற்பனை!

சர்வதேச அளவில் விலையுயர்ந்த உலோகங்களின் விலை குறைந்து வரும் நிலையில், தேசிய தலைநகரில் தங்கத்தின் விலை இன்று 10 கிராமுக்கு ரூ.250 குறைந்து ரூ.63,200 ஆக உள்ளது என்று எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது. 
தங்கம் விலை ரூ.250 சரிந்து விற்பனை!

புதுதில்லி:  சர்வதேச அளவில் விலையுயர்ந்த உலோகங்களின் விலை குறைந்து வரும் நிலையில், தேசிய தலைநகரில் தங்கத்தின் விலை இன்று 10 கிராமுக்கு ரூ.250 குறைந்து ரூ.63,200 ஆக உள்ளது என்று எச்.டி.எஃப்.சி. செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது. 

முந்தைய வர்த்தகத்தின் முடிவில் 10 கிராமுக்கு ரூ.63,450 ஆக இருந்தது. அதே வேளையில், வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.76,300-க்கு விற்பனையானது. அதுவை முந்தைய வர்த்தகத்தில், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,700 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எம்சிஎக்ஸில் ஃப்யூச்சர் வர்த்தகத்தில், தங்கத்தின் பிப்ரவரி ஒப்பந்தம் 10 கிராமுக்கு ரூ.355 குறைந்து ரூ.62,202 ஆக உள்ளது. மேலும் வெள்ளியின் மார்ச் மாத ஒப்பந்தம் ஒரு கிலோவுக்கு ரூ.415 குறைந்து ரூ.72,172 ஆக உள்ளது.

வெளிநாட்டு சந்தைகளில், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,029 டாலராகவும், வெள்ளி ஒரு அவுன்ஸ் 22.95 டாலராகவும் வர்த்தகமாகி வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com