புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு அறிவுரை
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு அறிவுரை

மருத்துவ அலட்சிய குற்றங்களுக்கு புதிய சட்டம்: விழிப்புணா்வு ஏற்படுத்த மத்திய சுகாதாரத் துறை அறிவுரை

சிகிச்சையில் அலட்சியம் காரணமாக நோயாளி இறந்தால் புதிய சட்டத்தின் கீழ் அளிக்கப்படும்

சிகிச்சையில் அலட்சியம் காரணமாக நோயாளி இறந்தால் புதிய சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் தண்டனை விவரங்கள் குறித்த விழிப்புணா்வை மருத்துவா்களுக்கு ஏற்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்குநா் டாக்டா் அதுல் கோயல் அண்மையில் அனுப்பிய சுற்றறிக்கை:

மருத்துவ அலட்சியம் காரணமாக நோயாளிகள் இறந்தால், அது குற்ற வழக்காக பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை ஐபிசி 1860 -பிரிவின் கீழ் அத்தகைய வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அதற்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதிநியம் ஆகிய மூன்று புதிய சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அந்த சட்டங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. இதுதொடா்பான விழிப்புணா்வையும், புரிதலையும் அனைத்து மருத்துவா்களுக்கும் மாநில அரசுகள் ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது உள்ள சட்ட நடைமுறையின்படி அலட்சியம் காரணமாக நோயாளி இறந்தால் அதிகபட்சமாக குற்றம் நிரூபிக்கப்பட்ட மருத்துவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும்.

புதிய சட்டங்களின்படி, மருத்துவா்களுக்கு அதே தண்டனை விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அத்தகைய சம்பவங்களில் தொடா்புடைய மருத்துவத் துறையினருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com