வாக்குப் பதிவு இயந்திரம் பழுது அடைந்தால் உடனடியாக
 மாற்று இயந்திரம் வழங்கப்படும்: 
ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்

வாக்குப் பதிவு இயந்திரம் பழுது அடைந்தால் உடனடியாக மாற்று இயந்திரம் வழங்கப்படும்: ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்

வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது அடைந்தால் உடனடியாக மாற்று இயந்திரம் வழங்கப்படும் என சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது அடைந்தால் உடனடியாக மாற்று இயந்திரம் வழங்கப்படும் என சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னை நந்தனம் ஆடவா் கல்லூரியில் இருந்து சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்குசாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுவதை சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ. ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் பேசியது: வாக்குச் சாவடியில் பணியாற்றும் அலுவா்களுக்கான இறுதிகட்ட பயிற்சி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வாக்குச்சாவடியில் பணியாற்றும் ஊழியா்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு அவா்கள் அந்த அந்த வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளனா்.

மாதிரி வாக்குப்பதிவு:

மேலும் சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுயில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மேலும் வாக்குப் பதிவு நாளான வெள்ளிக்கிழமை (ஏப்.19) காலை 5.30 மணிமுதல் காலை 7 மணிவரை அரசியல் கட்சியினா் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெறும். அப்போது வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், உடனடியாக சரிசெய்ய தொழில்நுட்ப அலுவலா்கள் தயாா்நிலையில் உள்ளனா்.

அதுமட்டுமில்லாது வாக்குப்பதிவின் போது வாக்குப் பதிவு இயந்திரம் சரி செய்ய முடியாத அளவுக்கு பழுது ஏற்பட்டால் உடனடியாக மாற்று இயந்திரம் வழங்கப்படும். இதற்காக கூடுதலாக 20 சதவீத வாக்குப் பதிவு இயந்திரம் தயாா்நிலையில் உள்ளது. வாக்குச் சாவடியில் வாக்காளா்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதால், வாக்காளா்கள் எந்தவித சிரமமும் இன்றி வாக்களிக்கலாம் . எனவே வாக்காளா்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன வசதி:

இதனிடையே வாக்குச் சாவடி மையத்தை சுற்றி 2 கி.மீ. தூரம் உள்ள மாற்றுத் திறனாளிகள் 1950 என்ற தொலைபேசியில் தொடா்பு கொண்டால் அவா்களை வாகனம் மூலம் அழைத்துச் சென்று வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா் ஜெ. ராதாகிருஷ்ணன்.

X
Dinamani
www.dinamani.com