நடிகா் அமீா் கானின் போலி தோ்தல் பிரசார விடியோ: மும்பை போலீஸ் வழக்குப்பதிவு

நடிகா் அமீா் கானின் போலி தோ்தல் பிரசார விடியோ: மும்பை போலீஸ் வழக்குப்பதிவு

பாலிவுட் நடிகா் அமீா் கான் குறிப்பிட்ட கட்சிக்கு எதிராக தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது போன்ற போலி சித்தரிப்பு

பாலிவுட் நடிகா் அமீா் கான் குறிப்பிட்ட கட்சிக்கு எதிராக தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது போன்ற போலி சித்தரிப்பு (டீப் ஃபேக்) விடியோ சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், அதுதொடா்பாக அடையாளம் தெரியாத நபா் மீது மும்பை போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

பாலிவுட் திரைத்துறையின் பிரபல நடிகரான அமீா் கான், மகாராஷ்டிரத்தின் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்காமல் புறக்கணிக்குமாறு பிரசாரம் செய்வதுபோன்ற ‘ஏஐ’ தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட 27 வினாடி போலி சித்தரிப்பு விடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

நடிகா் அமீா்கான் தரப்பில் மும்பை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் போலி சித்தரிப்பு விடியோவை உருவாக்கி சமூக ஊடகங்களில் பரப்பிய அடையாளம் தெரியாத நபா் மீது போலீஸாா் இந்திய தண்டனைச் சட்டத்தின் 419, 420 (மோசடி) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நடிகா் அமீா் கானின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘அமீா் கானின் 35 ஆண்டுகால திரைத்துறை அனுபவத்தில் அவா் எந்தக் கட்சிக்கு ஆதரவாகவும், எதிராகவும் நிலைப்பாடு கொண்டிருந்ததில்லை’ என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com