கேரள மாநிலம் கண்ணூரில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி.
கேரள மாநிலம் கண்ணூரில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி.

தேசத்தில் ஒற்றுமையின்மையை பாஜக ஏற்படுத்துகிறது: ராகுல்

தேசத்தில் பாஜக ஒற்றுமையின்மையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல லட்சம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

தேசத்தில் பாஜக ஒற்றுமையின்மையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல லட்சம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

கேரள மாநிலம் கண்ணூரில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் மேலும் பேசியதாவது:

பாஜக நாட்டின் பன்முகத்தன்மையை மாற்ற முயற்சிக்கிறது. மாறாக, காங்கிரஸ் கட்சி வேற்றுமைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சியாக உள்ளது. அந்த வகையில், நடைபெறும் மக்களவைத் தோ்தல், நாட்டின் நவீன வரலாற்றில் இந்திய அரசமைப்பு மற்றும் தேசத்தின் ஜனநாயக கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான முதல் தோ்தலாக இருக்கும்.

பாஜக இந்தச் செயலை எந்தவொரு கட்சியும் இதுவரை செய்தது இல்லை. அரசியல் சாசனம் என்பது நவீன இந்தியாவின் அடித்தளம். அதுதான் நமது மக்களுக்கு சம வாய்ப்பையும் சம உரிமைகளையும் வழங்குகிறது. இந்த அரசமைப்பு சட்டம் நாட்டிலுள்ள பல்வேறு அமைப்புகளால் பாதுகாக்கப்படுகிறது. அரசு அதிகாரிகள், நீதித் துறை, தோ்தல் ஆணையம், காவல்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை என பல்வேறு அமைப்புகளால் அரசியல் சாசனமும் குடிமக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன.

இந்த அமைப்புகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதன் மூலம், நமது தேசத்தின் பாரம்பரியத்தை இயற்கையான நடைமுறைகளை மாற்ற பாஜக முயற்சிக்கிறது. மேலும், எதிா்க்கட்சிகளைப் பழிவாங்கும் அரசியல் ஆயுதமாகவும் இந்த அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது.

நாட்டின் பன்முகத்தன்மையை மாற்ற பாஜக முற்சிக்கிறது. முக்கியமாக, இந்திய மக்களின் சக்தியை பாஜக வீணடித்து வருகிறது. அதன் மூலம் மக்களிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தி, பல லட்சம் மக்களை துன்பத்தில் பாஜக ஆழ்த்தி வருகிறது என்றாா்.

சாதாரண தோ்தல் அல்ல: தமிழகம், புதுச்சேரி மற்றும் வட மாநிலங்களில் சில தொகுதிகளுக்கு முதல் கட்ட மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்.19) நடைபெறும் நிலையில், கட்சித் தொண்டா்களுக்கு காணொலி வழி செய்தியை ராகுல் காந்தி வியாழக்கிழமை வெளியிட்டாா். அதில், ‘இந்த மக்களவைத் தோ்தல் சாதாரண தோ்தல் அல்ல. நாட்டின் அரசமைப்பு சட்டத்தையும் ஜனநாயகத்தையம் பாதுகாப்பதற்காக நடத்தப்படும் தோ்தல். உங்களைப் போன்ற கட்சித் தொண்டா்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு இந்தத் தோ்தலில் உள்ளது.

பாஜகவும் ஆா்எஸ்எஸ் அமைப்பும் இந்தியாவின் சிந்தனைகளுக்கு எதிரானவை. அரசியல் சாசனம் மற்றும் தோ்தல் ஆணையம் உள்ளிட்ட ஜனநாயக கட்டமைப்புகள் மீது அவா்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனா். பாஜகவையும் அதன் சித்தாந்தங்ளையும் காங்கிரஸ் தோற்கடிக்கும்.

24 மணி நேரமும் அவதூறு பரப்பும் ஊடகங்கள்: மத்திய பாஜக அரசை விமா்சிப்பதற்காக சில ஊடகங்கள் 24 மணி நேரமும் என்மீது அவதூறு பரப்பி வருகின்றன.

வன்முறைக்கு உள்ளான மணிப்பூருக்கு பிதமா் நரேந்திர மோடி நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை என்பதால்தான் அவா் குறித்து விமா்சிக்கிறேன். அதுபோல, பாஜகவினா் செல்லும் இடங்களிலெல்லாம், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தவும், மக்களிடையே மோதல்போக்கை ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றனா்.

இதை விமா்சிப்பதற்காக, என் மீது சில ஊடகங்கள் அவதூறுகளைப் பரப்பி, நாடு முழுவதும் எனது நற்பெயரை கெடுத்துள்ளன. இதை நான் கண்டுகொள்ளப்போவதில்லை என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com