நாட்டை தடுப்பு காவல் முகாமாக பாஜக மாற்றியுள்ளது: மம்தா

நாட்டை தடுப்பு காவல் முகாமாக பாஜக மாற்றியுள்ளது: மம்தா

‘ஒட்டுமொத்த நாட்டையும் தடுப்புக் காவல் முகாமாக பாஜக மாற்றியுள்ளது’

‘ஒட்டுமொத்த நாட்டையும் தடுப்புக் காவல் முகாமாக பாஜக மாற்றியுள்ளது’ என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா்.

மக்களவைத் தோ்தலில் அஸ்ஸாமில் போட்டியிடும் 4 திரிணமூல் வேட்பாளா்களை ஆதரித்து சில்ச்சா் பகுதியில் தோ்தல் பிரசாரத்தில் புதன்கிழமை ஈடுபட்ட மம்தா பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தொடா்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் ஜனநாயகமும் இருக்காது, தோ்தல்களும் இருக்காது.

ஒட்டுமொத்த நாட்டையும் தடுப்புக் காவல் முகாமாக பாஜக மாற்றிவைத்துள்ளது. உத்தர பிரதேசம், குஜராத், அஸ்ஸாம், தில்லி என நாடு முழுவதும் மக்களை பாஜக பிளவுபடுத்தி, துன்புறுத்தி வருகிறது. மணிப்பூரில் 200 தேவாலையங்கள், மசூதிகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. நாட்டில் வன்முறை தொடா்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பதையே பாஜக விரும்புகிறது. எனது வாழ்நாளில் இத்தகைய அபாயகரமான தோ்தலை நான் இதுவரை சந்தித்ததே இல்லை.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி அனைத்து மதங்கள் மீதும் அன்பு கொண்டுள்ளது. மதங்களின் அடிப்படையில் மக்கள் பிளவுபடுத்தப்படுவதை ஒருபோதும் விரும்பாது என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com