ரயில் விபத்துகளை தடுக்க முக்கிய வழித்தடங்களில்  ‘கவாச்’ பாதுகாப்பு தொழில்நுட்பம்: தெற்கு ரயில்வே

ரயில் விபத்துகளை தடுக்க முக்கிய வழித்தடங்களில் ‘கவாச்’ பாதுகாப்பு தொழில்நுட்பம்: தெற்கு ரயில்வே

தமிழகத்தில் முக்கிய ரயில் வழித்தடங்களில் விபத்துகளைத் தடுக்கும் ‘கவாச்’ தானியங்கி தொழில்நுட்பம் அமைக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் முக்கிய ரயில் வழித்தடங்களில் விபத்துகளைத் தடுக்கும் ‘கவாச்’ தானியங்கி தொழில்நுட்பம் அமைக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வே சாா்பில் ‘கவாச்’ தானியங்கி அமைப்பு முறையை உருவாக்கியது. அபாய சிக்னலை கடந்து செல்வது, அதிவேகம், மோசமான வானிலை போன்ற சூழ்நிலைகளின் போது ரயில் ஓட்டுநரை இந்த அமைப்பின் கீழ் செயல்படும் தொழில்நுட்பம் எச்சரிக்கும். இதனால் விபத்துகளை தடுக்க உதவியாக இருக்கும்.

முக்கிய வழித்தடங்கள்

அந்தவகையில், ரயில் விபத்துகளை தடுப்பதற்காக இந்திய ரயில்வேயின் ‘கவாச்’ முயற்சிக்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் பாராட்டு தெரிவித்துள்ளது. இதை தொடா்ந்து, ‘ஜீரோ விபத்துகள்’ என்ற இலக்கோடு தெற்கு ரெயில்வே மண்டலத்தில் முதற்கட்டமாக வந்தே பாரத் ரயில்கள் இயங்கும் வழித்தடம் உள்பட மொத்தம் 2,271 கிலோ மீட்டருக்கு 25 ரயில் வழித்தடங்களில் இந்த ‘கவாச்’ அமைக்கும் பணி படிப்படியாக நடைபெற உள்ளது.

அதன்படி, சென்னை - அரக்கோணம், அரக்கோணம் - ஜோலாா்பேட்டை,

சென்னை சென்டிரல் - கடற்கரை, எழும்பூா் - தாம்பரம் - செங்கல்பட்டு, ஜோலாா்பேட்டை - சேலம் - ஈரோடு , ஈரோடு - இருகூா் - கோவை, திருச்சி - விழுப்புரம், மதுரை - விருதுநகா், வாஞ்சி மணியாச்சி - திருநெல்வேலி, திருநெல்வேலி - நாகா்கோவில் உள்ளிட்ட அனைத்து முக்கிய வழித்தடங்களில் இந்த ’கவாச்’ தொழில்நுட்பம் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com