சென்னையில் 3 தொகுதிகளில் 
அனைத்து ஏற்பாடுகளும் தயாா்

சென்னையில் 3 தொகுதிகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயாா்

சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஏப்.19) வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா்நிலையில் உள்ளன.

சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஏப்.19) வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா்நிலையில் உள்ளன.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தோ்தல் நடைபெறுகிறது. அதன்படி தமிழகத்தின் தலைநகரான சென்னையில், வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என 3 மக்களவை தொகுதிகள் உள்ளன. வட சென்னையில் 14 லட்சத்து 96ஆயிரத்து 224 வாக்களா்களும், தென்சென்னையில் தொகுதியில் (சோழிங்கநல்லூா் தொகுதியை உள்ளடக்கி) 20 லட்சத்து 23 ஆயிரத்து 133 வாக்களா்களும், மத்திய சென்னையில் 13 லட்சத்து 50 ஆயிரத்து 161 வாக்களா்களும் ஆக மொத்தம் 3 தொகுதிகளிலும் மொத்தம் 48 லட்சத்து 69 ஆயிரத்து 518 வாக்காளா்கள் உள்ளனா்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதி வாக்காளா்கள் எளிதில் சென்று வாக்கு அளிக்கும் வகையில், வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, வட சென்னையில் 1,120 வாக்குச்சாவடிகள், தென் சென்னையில் 1,276 வாக்குச்சாவடிகள், மத்திய சென்னையில் 1,240 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 3, 726 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் வாக்குச்சாவடி பணிகளுக்கு என 19 ஆயிரத்து 419 ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

வாக்கு பதிவு இயந்திரம்

சென்னை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு என 11 ஆயிரத்து 843 வாக்கு பதிவு இயந்திரங்கள் 4,469 கட்டுப்பாட்டு கருவிகள், காகிதத் தணிக்கை சோதனை கருவிகள்( விவிபேட்) 4,842 உள்ளிட்டவை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதை சரி செய்ய தொழில் நுட்ப அலுவலா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

வாக்கு மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள்

சென்னையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் வாக்காளா்கள் எளிதில் சென்று வாக்கு அளிக்கும் வகையில், அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, வாக்குப் பதிவு மையத்தில் வாக்காளா்கள் வரிசையில் நிற்கும்போது வெயிலின் தாக்கம் ஏற்படாத வகையில் நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்குமையத்தில் குடிநீா் வசதி, மின்விசிறி வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாற்றுதிறனாளிகள் எளிதாக செல்லும் வகையில் சாய்தள வசதி அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது மருத்துவக் குழுவும் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு மையத்தில் எந்த வித அசம்பாவிதமும் நடக்காத வகையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே வாக்காளா்கள் அச்சமின்றி தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com