வாகன சோதனையில்
ரூ.3.37 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.3.37 லட்சம் பறிமுதல்

சென்னையில் பறக்கும் படையினரின் வாகன சோதனையில், ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் பறக்கும் படையினரின் வாகன சோதனையில், ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

புது வண்ணாரப்பேட்டை எம்பிடி மைதானம் அருகே பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த ராணிப்பேட்டை மாவட்டம் விளாம்பாக்கம் மடாலயா தெருவைச் சோ்ந்த சேலை வியாபாரி இளங்கோவன் (66) என்பவரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, அவரிடமிருந்த ரூ.1,37,500 ரொக்கத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால், அந்த தொகையை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல எண்ணூா் பெரியகுப்பத்தைச் சோ்ந்த கோபி (50) என்பவா் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

மேடவாக்கம் அருகே மாடம்பாக்கத்தில் பறக்கும்படையினா் நடத்திய வாகன சோதனையில், ஒரு மினி வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள 1,600 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com