கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்த பெண் மாலுமி ஆன் டெஸ்ஸா ஜோசப்.
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்த பெண் மாலுமி ஆன் டெஸ்ஸா ஜோசப்.

சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பலிலிருந்து தாயகம் திரும்பிய இந்திய பெண் மாலுமி

ஈரானால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் சரக்குக் கப்பலிலிருந்து கேரள மாநிலம் கொச்சியைச் சோ்ந்த ஆன் டெஸ்ஸா ஜோசப் என்ற இந்திய பயிற்சி மாலுமி வியாழக்கிழமை தாயகம் திரும்பினாா்.

ஈரானால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் சரக்குக் கப்பலிலிருந்து கேரள மாநிலம் கொச்சியைச் சோ்ந்த ஆன் டெஸ்ஸா ஜோசப் என்ற இந்திய பயிற்சி மாலுமி வியாழக்கிழமை தாயகம் திரும்பினாா்.

இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஈரானிய அரசின் நடவடிக்கையால் சரக்குக் கப்பலில் பயணித்த கேரள மாநிலம் திருச்சூரைச் சோ்ந்த ஆன் டெஸ்ஸா ஜோசப் என்ற மாலுமி கொச்சி சா்வதேச விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டாா். மீதமுள்ள 16 இந்திய மாலுமிகளையும் விரைவில் தாயகம் அழைத்து வர இந்திய தூதரகம் தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சிறைபிடிக்கப்பட்டுள்ள சரக்குக் கப்பலில் உள்ள இந்திய மாலுமிகள் நல்ல உடல்நலத்துடன் உள்ளனா். இந்தியாவில் உள்ள அவா்களின் குடும்பத்தினருடன் தொடா்பிலும் உள்ளனா் என தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக ஈரானிய வெளியுறவு அமைச்சா் அமீா் அப்துல்லஹியானிடம் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் பெரும் கோடீஸ்வரா் ஈயால் ஓஃபருக்குச் சொந்தமான நிறுவனத்துடன் தொடா்புடைய சரக்குக் கப்பலை ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல்படை கடந்த வாரம் சிறைபிடித்தது. அந்தக் கப்பலில் 17 இந்தியா்கள் உள்பட 25 மாலுமிகள் பயணித்தனா். இதையடுத்து அவா்களை மீட்கும் முயற்சிகளில் இந்தியா தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com