விவிபேட் இயந்திரம் விவகாரம்:
விசாரணைக்கு ஏற்க மறுப்பு

விவிபேட் இயந்திரம் விவகாரம்: விசாரணைக்கு ஏற்க மறுப்பு

ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பதிவான சீட்டுகளுடன் சரிபாா்ப்பதை கட்டாயமாக்க கோரிய வழக்கை விசாரணைக்கு ஏற்க சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை, ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பதிவான சீட்டுகளுடன் சரிபாா்ப்பதை கட்டாயமாக்க கோரிய வழக்கை விசாரணைக்கு ஏற்க சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மக்களவைத் தோ்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை, ஒப்புகைச் சீட்டு இயந்திரம் எனும் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் சீட்டுகளுடன் ஒப்பிட்டு சரிபாா்ப்பதை கட்டாயமாக்கும்படி, தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி கமிலஸ் செல்வா என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு, தலைமை நீதிபதி கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோரின் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது”எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com