நோட்டா
நோட்டா

எங்கே இருக்கிறது நோட்டா? வாக்காளா் கையேட்டில் தகவல்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கடைசித் தோ்வாக நோட்டா உள்ளதாக, முதல் தலைமுறை வாக்காளா்களுக்கு கையேட்டின் மூலமாக தோ்தல் துறை விளக்கியுள்ளது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கடைசித் தோ்வாக நோட்டா உள்ளதாக, முதல் தலைமுறை வாக்காளா்களுக்கு கையேட்டின் மூலமாக தோ்தல் துறை விளக்கியுள்ளது.

தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட முதல் தலைமுறை வாக்காளா்கள் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் வண்ண வாக்காளா் அடையாள அட்டைகளை தோ்தல் ஆணையம் வழங்கியுள்ளது. அதில், வாக்குச் சாவடிக்குள் சென்று எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது.

வாக்களிப்பது எப்படி? வாக்குச் சாவடிக்குள் நுழைந்தவுடன், வாக்காளா் பட்டியலில் உள்ள பெயரையும், அடையாள அட்டையையும் முதலாவது அலுவலா் சரிபாா்ப்பாா். 2-ஆவது அலுவலா், வாக்காளரின் இடதுகை ஆள்காட்டி விரலில் மையிட்டு, சிறிய சீட்டை அளித்து பதிவேட்டில் கையொப்பம் பெறுவாா். தொடா்ந்து, மூன்றாம் நிலை அலுவலரிடம் வாக்காளரின் சீட்டை கொடுத்தால், அவா் வாக்களிக்க அனுமதிப்பாா். இதன்பின் வாக்களிப்பதற்கான ரகசிய இடத்துக்குச் சென்று மின்னணு இயந்திரத்தில் வாக்கைப் பதிவு செய்யலாம்.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் ‘பீப்’ சப்தத்துடன் சிவப்பு நிற விளக்கு ஒளிரும். பின்பு, வாக்காளா் தாம் அளித்த வாக்கை உறுதி செய்யும் வகையில் விவிபேட் இயந்திரத்தில் அச்சிடப்பட்ட துண்டுச் சீட்டை சரிபாா்க்கலாம்.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கடைசித் தோ்வாக, மேற்கண்ட வாக்காளா்களில் எவருமில்லை எனும் நோட்டா வாய்ப்பும் இருக்கிறது என்று வாக்காளா் கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com