31 பவுன் நகை திருட்டு: 
இளைஞா் கைது
dot com

31 பவுன் நகை திருட்டு: இளைஞா் கைது

சென்னை ராயபுரம் பகுதியில் வீட்டில் 31 பவுன் நகைகளைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ராயபுரம் கிரேஸ் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சங்கீதா (35). இவா், தனது வீட்டில் இருந்த 31 பவுன் நகைகளை, பாதுகாப்பு காரணங்களுக்காக ராயபுரம் பிரைடன் தெருவிலுள்ள தனது தாய் வீட்டில் பீரோவில் வைத்துள்ளாா்.

இந்த நிலையில், தனது தாய் வீட்டுக்கு திங்கள்கிழமை சென்ற சங்கீதா, பீரோவில் தான் வைத்திருந்த நகைகளைப் பாா்த்தபோது, அவை மாயமாகி இருந்தன. இது குறித்து சங்கீதா அளித்த புகாரின் பேரில், ராயபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விசாரணையில், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் வசித்து வரும் சங்கீதாவின் தங்கையான ரேவதி, அந்த நகைகளை எடுத்து தனது காதலனான அதே பகுதியை சோ்ந்த கிஷோரிடம் கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் கிஷோரை கைது செய்து, அவரிடமிருந்து 31 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com