மே 31-க்குள் ஆதாா்-பான் இணைப்பு: அதிக விகிதத்தில் டிடிஎஸ் பிடித்தம் இல்லை

மே 31-க்குள் ஆதாா்-பான் இணைப்பு: அதிக விகிதத்தில் டிடிஎஸ் பிடித்தம் இல்லை

நிகழாண்டு மே 31-க்குள் ஆதாருடன் நிரந்தர கணக்கு எண்ணை (பான்) இணைத்தால், மூலவரி பிடித்தம்செய்யப்படாது

நிகழாண்டு மே 31-க்குள் ஆதாருடன் நிரந்தர கணக்கு எண்ணை (பான்) இணைத்தால், அதிக விகிதத்தில் மூலவரி பிடித்தம் (டிடிஎஸ்) செய்யப்படாது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சிபிடிடி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஆதாருடன் இணைக்காமல் பான் அட்டை செயலழிந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவா்த்தனைகளுக்கு அதிக அளவில் டிடிஎஸ்/டிசிஎஸ் (மூலவரி வசூல்) பிடித்தம் செய்வது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வரி செலுத்துவோா் குறைகளை முன்வைத்துள்ளனா்.

இந்நிலையில், கடந்த மாா்ச் 31 வரை மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவா்த்தனைகளுக்கும், மே 31-க்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைத்தாலும் அதிக அளவில் டிடிஎஸ்/டிசிஎஸ் பிடித்தம் செய்யப்படாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com