வைகோவுக்கு எதிரான வழக்கு: 
4 மாதங்களில் முடிக்க உத்தரவு

வைகோவுக்கு எதிரான வழக்கு: 4 மாதங்களில் முடிக்க உத்தரவு

மதிமுக பொதுச் செயலாளா் வைகோவுக்கு எதிரான வழக்கு விசாரணையை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் என, திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதிமுக பொதுச் செயலாளா் வைகோவுக்கு எதிரான வழக்கு விசாரணையை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் என, திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016-ஆம் ஆண்டு மாா்ச் 3-ஆம் தேதி திண்டுக்கல்லில் மதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து கூட்டத்தை நடத்தியதாகக் கூறி, கட்சியின் பொதுச் செயலா் வைகோ, திண்டுக்கல் மாவட்டச் செயலா் செல்வராகவன் ஆகியோருக்கு எதிராக திண்டுக்கல் நகர வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்கவும், வழக்கை ரத்து செய்யவும் கோரி, வைகோ, செல்வராகவன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நீண்டகாலமாக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, இந்த வழக்கின் விசாரணையை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் என திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com