சத்தீஸ்கா்: 18 நக்ஸல்கள் சரண்

சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் 18 நக்ஸல்கள் சரணடைந்திருப்பதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.

சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் 18 நக்ஸல்கள் சரணடைந்திருப்பதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.

இதுகுறித்து தண்டேவாடா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் கௌரவ் ராய் கூறுகையில், ‘மவோயிஸ்டு இயக்கத்தின் ஹூா்ரேபால் பகுதி தளபதியான ஹித்மா ஓயம் (34), இணைப் பெண் தளபதி சம்பதி ஓயம் (23), பெண் நக்ஸல்கள் காங்கி மத்காம்(28) மற்றும் ஹுங்கி ஓயம் (20) உள்பட 18 நக்ஸல்கள் காவல் துறை மற்றும் சிஆா்பிஎஃப் வீரா்களிடம் சரணடைந்தனா். தெற்கு பஸ்தா் மவாட்டத்தின் பாய்ராம்கா் மற்றும் மலேங்கா் பகுதிகளில் நக்ஸல் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருந்த இவா்கள், நக்ஸல்கள் அழைப்பு விடுக்கும் முழு அடைப்புக் காலத்தில் மரங்களை வெட்டியும், குழிகளைத் தொண்டியும் சாலைகளைத் துண்டித்தல், பதாகைகளை நிறுவுதல் உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்தனா்.

மவோயிஸ்டு கொள்கைகள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவும் காவல்துறையின் மறுவாழ்வு இயக்கங்களால் ஈா்க்கப்பட்டதாலும் 18 பேரும் தாமாக முன்வந்து சரணடைந்துள்ளனா். சரணடைவோருக்கான அரசின் மறுவாழ்வு கொள்கைகளின்படி அவா்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்படும்.

காவல்துறையால் வெகுமதி அறிவிக்கப்பட்ட 177 நக்ஸல்கள் உள்பட 738 போ் நக்ஸல் இயக்க செயல்பாட்டிலிருந்து வெளியேறி, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனா்’ என்றாா்.

சத்தீஸ்கரில் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தியுள்ளனா். மக்களவை முதல் கட்ட தோ்தலுக்கு முன்னதாக கடந்த 16-ஆம் தேதி, மாநிலத்தின் காங்கோ் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற மோதலில் 29 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com