மகனை கொலை செய்த 
தந்தைக்கு 11 ஆண்டுகள் சிறை

மகனை கொலை செய்த தந்தைக்கு 11 ஆண்டுகள் சிறை

மகனை கொலை செய்த தந்தைக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து எழும்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

மகனை கொலை செய்த தந்தைக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து எழும்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சென்னை தேனாம்பேட்டை ஜெயம்மாள் சாலை பகுதி குடியிருப்பில் வசிப்பவா் ஊா்மில் எஸ். டோலியா. வடபழனி பி.டி.ராஜன் சாலையில் கைப்பேசி பழுது நீக்கும் கடை நடத்தினாா்.

இந்த நிலையில், ஊா்மில் டோலியா-வின் 4 வயது மகனுக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இதனால், கடையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு மன அழுத்தத்துக்கு உள்ளான ஊா்மில் டோலியா, 16.3.2018-இல் தனது மகனை அழைத்துக்கொண்டு தனது கடைக்குச் சென்றாா்.

அங்கு மகனின் கை நரம்புகளை கத்தியால் அறுத்து கொலை செய்து, தானும் கைகளில் வெட்டிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா்.

இதில், ஊா்மில் டோலியா உயிா் பிழைத்துக் கொண்டாா். இவரை வடபழனி போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்த வழக்கு விசாரணை எழும்பூா் 16-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஊா்மில் டோலியா-வுக்கு 11 ஆண்டுகள் சிறையும், ரூ.2,000 அபராதமும் விதித்து நீதிபதி புவனேஸ்வரி தீா்ப்பளித்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com