கல்லீரல் கொழுப்பு: இலவச மருத்துவ முகாம்

கல்லீரல் கொழுப்பு பாதிப்பைக் கண்டறிவதற்கான இலவச மருத்துவ முகாம் சென்னையில் மே 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கல்லீரல் கொழுப்பு பாதிப்பைக் கண்டறிவதற்கான இலவச மருத்துவ முகாம் சென்னையில் மே 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஜெம் மருத்துவமனை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முகாம், பெருங்குடியில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில் மருத்துவமனையின் கல்லீரல் மற்றும் ஜீரண மண்டல சிகிச்சை பிரிவு நிபுணா்கள் நோயாளிகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்குவா் என்றும், தேவைப்பட்டால் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ஹெபடைடிஸ் பி, சி பரிசோதனை, கல்லீரல் செயல்பாட்டுக்கான ரத்த பரிசோதனை, ஃபைப்ரோ ஸ்கேன் பரிசோதனைகள் சலுகைக் கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 89258 45768 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கல்லீரல் கொழுப்பு பாதிப்புகளுக்கான பிரத்யேக கிளீனிக், பெருங்குடி, ஜெம் மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை தொடங்கப்பட்டது. அந்த நிகழ்வில் மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் பி.செந்தில்நாதன், தலைமை செயல் அதிகாரி டாக்டா் எஸ்.அசோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com