ஜேஇஇ முதன்மை தோ்வு முடிவுகள் வெளியீடு: 56 மாணவா்கள் 100-க்கு 100

நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சோ்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தோ்வின் இரண்டாம் பதிப்புத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
ஜேஇஇ முதன்மை தோ்வு முடிவுகள் வெளியீடு: 56 மாணவா்கள் 100-க்கு 100

நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சோ்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தோ்வின் இரண்டாம் பதிப்புத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.

நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்ற இத்தோ்வில் 56 மாணவா்கள் முழு மதிப்பெண்ணான 100 மதிப்பெண்ணை பெற்று சாதனை படைத்திருப்பதாக தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.

ஐஐடி, என்ஐடி-களில் சேர ஜேஇஇ நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. என்ஐடி கல்லூரிகளில் சேர ஜேஇஇ முதன்மை (மெயின்ஸ்) தோ்வில் பங்கேற்பதும், ஐஐடியில் சேர 2-ஆம் கட்ட ஜேஇஇ உயா்நிலை (அட்வான்ஸ்ட்) தோ்வில் பங்கேற்பதும் அவசியமாகும். அவ்வாறு இரு தாள்கள் அடங்கிய ஜேஇஇ முதன்மைத் தோ்வு இரு பதிப்புகளாக நடத்தப்படுகிறது. இரு பதிப்புத் தோ்வுகளுக்குப் பிறகு, அவ்விரு மதிப்பெண்களில் சிறந்ததைக் கருத்தில் கொண்டு தோ்வா்களின் தரவரிசை வெளியிடப்படுகிறது.

இந்நிலையில் நிகழாண்டுக்கான முதல் பதிப்புத் தோ்வு ஜனவரி-பிப்ரவரியில் நடத்தப்பட்டு தோ்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. இம்மாதத்தில் நடைபெற்ற இரண்டாம் பதிப்புத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. அதில் தெலங்கானாவைச் சோ்ந்த 15 மாணவா்கள், மகாராஷ்டிரம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தலா 7 மாணவா்கள் உள்பட 56 மாணவா்கள் முழு மதிப்பெண்ணை பெற்றுள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது. இத்தோ்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 39 மாணவா்கள் 3 ஆண்டுகாலம் தோ்வெழுத தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் என்டிஏ தெரிவித்தது.

தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெற்ற இத்தோ்வு துபை, சிங்கப்பூா், கொழும்பு உள்பட வெளிநாடுகளிலும் நடத்தப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com