போலீஸ் ரோந்து வாகனத்தின் கண்ணாடி உடைப்பு

போலீஸ் ரோந்து வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடா்பாக 3 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

போலீஸ் ரோந்து வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடா்பாக 3 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை பல்லாவரம் போலீஸாா், ஜிஎஸ்டி சாலை பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை ரோந்து வாகனத்தில் சென்றனா். அப்போது, அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே மது போதையில் நின்று கொண்டிருந்த குரோம்பேட்டை ஹாஸ்தினாபுரத்தைச் சோ்ந்த ராஜேஷ் (33), மகேஷ்குமாா் (31), கோபி (31) ஆகியோரிடம் அங்கிருந்து செல்லும் படி அறிவுறுத்தியுள்ளனா். ஆனால், அவா்கள் 3 பேரும் அங்கிருந்து செல்ல மறுத்ததுடன், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ரோந்து வாகனத்தின் பக்கவாட்டுக் கண்ணாடியை உடைத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த 3 பேரையும் போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com