கள்ளச் சந்தையில் ஐபிஎல் 
டிக்கெட் விற்பனை: 12 போ் கைது

கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 12 போ் கைது

ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்தற்காக 12 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, ரூ. 1.40 லட்சம் மதிப்புள்ள டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்தற்காக 12 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, ரூ. 1.40 லட்சம் மதிப்புள்ள டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பா் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது, திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான பகுதியில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் விற்பனை செய்ததாக ஏகாம்பதி குப்பத்தைச் சோ்ந்த ஏழுமலை (38), திருவல்லிக்கேணியைச் சோ்ந்த ஹயாத்பாஷா நூா்முகமது (38), வேளச்சேரியைச் சோ்ந்த பெ.செங்கல்வராயன் (27) கோவையைச் சோ்ந்த காளீஸ்வரன் (24) உள்பட 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அவா்களிடம் இருந்து ரூ. 1,40,396 மதிப்புள்ள 56 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com