ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க
வேண்டும்: அண்ணாமலை

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்: அண்ணாமலை

கோவில்பட்டியில் ரேஷன் அரிசியை வெளி மாநிலங்களுக்கு கடத்தும் கும்பலை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோவில்பட்டியில் ரேஷன் அரிசியை வெளி மாநிலங்களுக்கு கடத்தும் கும்பலை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.

அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பல், வழக்குரைஞா் ஒருவா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை அளிக்கிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாம்பு காா்த்திக் எனும் திமுகவைச் சோ்ந்த நபா், கடந்த ஆண்டு ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு ஒன்றில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவா்.

கோவில்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து மாதம் 3.5 டன் ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காவல்துறை அல்லது தமிழக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.

பாம்பு காா்த்திக் உள்ளிட்ட ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் கும்பலைச் சோ்ந்த அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com