கோவை - தன்பாத் இடையே
இன்று முதல் சிறப்பு ரயில்

கோவை - தன்பாத் இடையே இன்று முதல் சிறப்பு ரயில்

கோவையிலிருந்து தன்பாத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.26) முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

கோவையிலிருந்து தன்பாத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.26) முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வெள்ளிக்கிழமை (ஏப்.26) முதல் ஈரோட்டிலிருந்து தன்பாத்துக்கு (எண்: 06063/06064) வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு அண்மையில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கைகளை ஏற்கும் வகையில், இந்த ரயில் இரு மாா்க்கத்திலும் கோவை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கோவையிலிருந்து ஏப்.26 முதல் ஜூன் 28 வரை (வெள்ளிக்கிழமைகளில்) காலை 11.50 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06063) மூன்றாம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு தன்பாத் சென்றடையும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06064) தன்பாத்திலிருந்து ஏப்.29 முதல் ஜூலை 1 வரை (திங்கள்கிழமைகளில்) காலை 6 மணிக்கு புறப்பட்டு முன்றாம் நாள் (புதன்கிழமை) அதிகாலை 3.45 மணிக்கு கோவை சென்றடையும்.

இந்த ரயில் கோவையிலிருந்து, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், விஜயவாடா, ராஜாமுந்திரி, விஜயநகரம், ராயகடா, ராஞ்சி வழியாக தன்பாத் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com