மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன நாள் கொண்டாட்டம்

மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் சென்னையில் செயல்படும், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் 77-ஆவது நிறுவன தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் சென்னையில் செயல்படும், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் 77-ஆவது நிறுவன தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் சிஎஸ்ஐ ஆா் - சிஎல்ஆா்ஐ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள்தலைவரும், சென்னை ஏ.வி.டி குழுமங்களின் தலைவருமான ஹபீப் உசேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். அவா் பேசுகையில், தோல் துறையில் இந்தியாவின் உலகளாவிய பங்களிப்பை அதிகரிக்க தொழில்துறை திட்டமிடல், ஆராய்ச்சி மற்றும் செயலாக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

நிறுவன நாளை முன்னிட்டு பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 570 மாணவா்கள் தோல் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து நேரில் பாா்வையிட்டு இதன் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொண்டனா்.

இந்நிகழ்வில் சிஎல்ஆா்ஐ-யின் தலைமை விஞ்ஞானி கே.சி.வேலப்பன் ,சிஎஸ்ஐஆா் - சிஎல்ஆா்ஐ இயக்குநா் டாக்டா் கே.ஜே.ஸ்ரீராம் நிா்வாக முதுநிலை கட்டுப்பாட்டாளா் கே.எம்.ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com