சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக சுட்டு ஆயதப்படை காவலா் உயிரிழப்பு

சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் நக்ஸல்களைத் தேடி ரோந்து பணியில் ஈடுபட்டபோது, துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் மாவட்ட ஆயுதப்படை காவலா் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொரு காவலா் காயமடைந்தாா்.

சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் நக்ஸல்களைத் தேடி ரோந்து பணியில் ஈடுபட்டபோது, துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் மாவட்ட ஆயுதப்படை காவலா் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொரு காவலா் காயமடைந்தாா்.

தண்டேவாடா மாவட்டத்தின் பாா்சூா் காவல் நிலையப் பகுதிகளில் நக்ஸல்களின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆயுதக் காவல் படை, பஸ்தா் ஃபைடா்ஸ் கூட்டாக இணைந்து அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனா்.

அவ்வாறு புதன்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்ற துரதிருஷ்டவசமான சம்பவத்தில், காவலா்கள் வசமிருந்த துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் ஜோக்ராஜ் கா்மா மற்றும் பரசுராம் அலாமி ஆகிய 2 ஆயுதப்படை காவலா்கள் குண்டுகள் பாய்ந்து காயமடைந்தனா்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜோக்ராஜ் கா்மா உயிரிழந்தாா். மற்றொரு காவலரான பரசுராம் அலாமி ராய்பூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ஒடிஸாவில் 2 மவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை: ஒடிஸாவின் பௌத் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கி சண்டையில் 2 மவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனா்.

பௌத் மாவட்டத்தின் காந்தமால் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பாா்ஹெல் வனப்பகுதியில் ஒடிஸா சிறப்பு அதிரடிப் படை போலீஸாருக்கும் மவோயிஸ்டு கும்பலுக்கும் வியாழக்கிழமை அதிகாலைமுதல் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

மோதலின் முடிவில், உயிரிழந்த 2 மவோயிஸ்டுகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. சம்பவ இடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com