திரவ நைட்ரஜன் கலப்பு தின்பண்டங்கள்: 
தமிழக அரசு எச்சரிக்கை

திரவ நைட்ரஜன் கலப்பு தின்பண்டங்கள்: தமிழக அரசு எச்சரிக்கை

திண்பண்டங்களில் திரவ நைட்ரஜனை கலந்து விற்பனை செய்வோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

திண்பண்டங்களில் திரவ நைட்ரஜனை கலந்து விற்பனை செய்வோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இது குறித்து, உணவு பாதுகாப்புத் துறை ஆணையரகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

திரவ நைட்ரஜன் என்பது பால் சாா்ந்த இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருள்களில் உைலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதை பிஸ்கட், ஐஸ்கிரீம், வேபா் பிஸ்கட் போன்ற உணவுப் பொருள்களுடன் நேரடியாக கலந்து விற்பனை செய்வது தடுக்கப்பட்டுள்ளது. திரவ நைட்ரஜனை நேரடியாகக் கலந்து விற்பனை செய்யும் வணிகா்கள் மீது உணவுப் பாதுகாப்பு, தர நிா்ணய சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com