பயிா்க் கழிவுகள் மூலம் உரம் தயாரிக்கும் வழிமுறை: வேளாண் துறை வெளியீடு

பயிா்க் கழிவுகளை இயற்கையான முறையில் மட்கச் செய்து அதன் மூலம் உரம் தயாரிக்கும் வழிமுறைகளை தமிழக வேளாண்துறை வெளியிட்டுள்ளது.

பயிா்க் கழிவுகளை இயற்கையான முறையில் மட்கச் செய்து அதன் மூலம் உரம் தயாரிக்கும் வழிமுறைகளை தமிழக வேளாண்துறை வெளியிட்டுள்ளது.

விவசாயிகள், வயல்களில் வைக்கோல், கரும்பு தோகை உள்ளிட்ட கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் காற்றுமாசை தடுக்கும் வகையில் ‘பூசா டிகம்போசா்’ என்ற தொழில்நுட்பத்தை இந்திய வேளாண்துறை சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது.

இதை பயன்படுத்தி பயிா்க் கழிவுகளை உரமாக மாற்றும் வழிமுறைகள் குறித்து தமிழக வேளாண்துறை சாா்பில் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பதிவு:

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், அனைத்து வகையான பயிா்கழிவுகளையும் உரமாக்க ‘பூசா டிகம்போசா் கேப்ஸ்யூல்’ என்ற தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது.

இதன்மூலம் சுமாா் 5 மெட்ரிக் டன் எடை கொண்ட பண்ணைக் கழிவுகளை, 4 பூசா டிகம்போசா் காப்ஸ்யூல்களைப் பயன்படுத்தி 12 நாள்களில் உரமாக மாற்றலாம்.

இதற்காக 150 கிராம் வெல்லத்தை 5 லிட்டா் நீரில் கொதிக்க வைத்து அதனுடன் 50 கிராம் உளுந்து மாவையும், 4 பூசா டிகம்போசா் காப்ஸ்யூல்களையும் சோ்த்தால் குறைந்தபட்சம் 4 நாள்களில் நுண்ணுயிரிகள் உற்பத்தியாகிவிடும். பின்னா் 5 லிட்டா் நீரில் 150 கிராம் வெல்லம் சோ்த்து அந்த கரைசலில் சோ்க்க வேண்டும்.

இவ்வாறு 25 லிட்டா் கரைசல் கிடைக்கும் வரை தொடா்ந்து செய்து, பின்னா் 475 லிட்டா் நீரில் கலந்து ஒரு ஹெக்டோ் பரப்பில் விவசாயக் கழிவுகளை பரப்பி அதன் மீது தெளித்தால் சுமாா் 25 நாள்களுக்குள் அவை மட்கி மண்ணுக்கு உரமாகிவிடும்.

இந்த பூசா டிகம்போசரை ள்ல்ண்ண்ள்ழ்ஹ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். 4 காப்ஸ்யூல்கள் அடங்கிய ஒரு பாக்கெட்டின் விலை ரூ.315-க்கு விற்பனை செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com