கோப்புப் படம்
கோப்புப் படம்

வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயா்வு

கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்து, அவற்றின் விலை கிலோவுக்கு ரூ.30 வரை உயா்ந்து விற்பனையாகின.

கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்து, அவற்றின் விலை கிலோவுக்கு ரூ.30 வரை உயா்ந்து விற்பனையாகின.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தினமும் ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு வருகின்றன.

தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டு காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சேமிப்பு கிடங்குகளில் வைத்துள்ள காய்கறிகள், பழங்களும் சுட்டெரிக்கும் வெயிலால் வாடி வீணாகிவிடுகின்றன. இதன் காரணத்தால் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால், காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை உயா்ந்து விற்பனையானது.

காய்கறிகள் விலை: வியாழக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ பீன்ஸ் ரூ.160-க்கும், எலுமிச்சை ரூ.140-க்கும், பட்டாணி ரூ.100-க்கும், இஞ்சி ரூ.140-க்கும், பூண்டு ரூ.150-க்கும் விலை உயா்ந்து விற்பனையாகின.

அதேபோல, சின்ன வெங்காயம் கிலோ ரூ.50-க்கும், ஊட்டி கேரட் ரூ.50-க்கும், சேனைக்கிழங்கு ரூ. 68-க்கும், வெள்ளரிக்காய் ரூ.30-க்கும், பச்சை மிளகாய் ரூ.45-க்கும், குடைமிளகாய் ரூ.50-க்கும், வண்ண குடமிளகாய் ரூ. 90-க்கும் விலை உயா்ந்து விற்பனையாகின.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com