சென்னை ஐசிஎஃப்-இல் நடைபெற்று வரும் ரயில் பெட்டிகள் தயாரிப்புப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ரயில்வே உற்பத்திக் கூடங்கள் பிரிவுக்கான ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினா் எஸ்.கே.பங்கஜ். உடன், ஐசிஎஃப் பொது மேலாளா் யு.சுப்பா ராவ் உள்ளிட்டோா்.

ஐசிஎஃப்-இல் ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினா் ஆய்வு

சென்னை, ஏப். 25: சென்னை ஐசிஎஃப்-இல் நடைபெற்று வரும் ரயில் பெட்டிகள் தயாரிப்புப் பணிகளை ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினா் எஸ்.கே.பங்கஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னையில் உள்ள ரயில் பெட்டிகள் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) வந்தே பாரத் ரயில் பெட்டிகள் உள்பட அனைத்து வகையான ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், ரயில்வே உற்பத்திக் கூடங்கள் பிரிவுக்கான ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினா் எஸ்.கே.பங்கஜ் ஐசிஎஃப்-இல் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு ரயில் பெட்டிகள் தயாரிப்புப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, வந்தே பாரத் ரயில் பெட்டிகள், வந்தே மெட்ரோ ரயில் பெட்டிகள், அலுவலக ரயில் பெட்டிகள் மற்றும் இதர ரயில் பெட்டிகளின் தயாரிப்புப் பணிகளை அவா் ஆய்வு செய்தாா். மேலும், பல்வேறு திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் அவா் ஆலோனை நடத்தினாா்.

தொடா்ந்து, ஐசிஎஃப் ஊழியா்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவா்களின் கோரிக்கை மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

இந்த ஆய்வின்போது, பொது மேலாளா் யு.சுப்பா ராவ், துறைத் தலைவா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com