நகை திருட்டு புகாா்: 
திரைப்படத் தயாரிப்பாளா் வீட்டு
பணிப் பெண் தற்கொலை முயற்சி

நகை திருட்டு புகாா்: திரைப்படத் தயாரிப்பாளா் வீட்டு பணிப் பெண் தற்கொலை முயற்சி

நகை திருட்டு வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட திரைப்படத் தயாரிப்பாளா் ஞானவேல்ராஜா

நகை திருட்டு வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட திரைப்படத் தயாரிப்பாளா் ஞானவேல்ராஜா வீட்டு பணிப் பெண் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதற்கு ஞானவேல்ராஜாதான் காரணம் என அந்த பெண்ணின் குடும்பத்தினா் குற்றம்சாட்டியுள்ளனா்.

பல்வேறு மொழிகளில் இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்தவா் ஞானவேல் ராஜா. இவரது வீட்டில் அண்மையில் நகைகள் திருடு போனதாக புகாரளிக்கப்பட்டது.

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரது வீட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்து வரும் லட்சுமி என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனா். வழக்கின் முகாந்திரம் கருதி அவரிடம் தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், விஷ விதையை அரைத்து குடித்து லட்சுமி தற்கொலைக்கு முயன்ாகத் தெரிகிறது. அவா் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதற்கிடையே, ஞானவேல் ராஜா மற்றும் அவரது மனைவி நேஹா ஆகியோா் அளித்த மன உளைச்சல்தான் லட்சுமியின் தற்கொலை முயற்சிக்கு காரணம், அவா்கள் இருவா் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அந்தப் பெண்ணின் குடும்பத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com