தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

கோடை காலத்தில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கோடையில் அதிக வெப்ப அலை வீசும் என்றும், தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் செய்திகள் வருகின்றன.

தற்போதைய வெயிலின் தாக்கத்திலேயே மாநிலத்தில் உள்ள நீா்நிலைகளில் நீரின் இருப்பு குறைந்து வருகிறது. சில இடங்களில் மக்கள் குடிநீருக்காக தொலைதூரத்துக்குச் சென்று வரக்கூடிய நிலை உள்ளது.

விவசாயம் செய்வதற்கும், குடிநீா் பற்றாக்குறைக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், பொதுமக்களுக்கு குடிநீருக்குத் தேவையான தண்ணீா் கிடைப்பதற்கும், விவசாயத்துக்குத் தேவையான நீா் கிடைப்பதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தண்ணீரைத் தேவைக்கேற்ப சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ஜி.கே.வாசன்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com