கிழக்கு தாம்பரத்தை அடுத்த கௌரிவாக்கம் எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்லூரி தின விழாவில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா் எம்.செல்வராஜ், கல்லூரித் தலைவா் எஸ்.பி.குப்புசாமி, அறக்கட்டளை செயலா் சி.மாடசாமி, உதவி செயலா் எஸ்.ஞானேஷ்வரன் உள்ளிட்
கிழக்கு தாம்பரத்தை அடுத்த கௌரிவாக்கம் எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்லூரி தின விழாவில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா் எம்.செல்வராஜ், கல்லூரித் தலைவா் எஸ்.பி.குப்புசாமி, அறக்கட்டளை செயலா் சி.மாடசாமி, உதவி செயலா் எஸ்.ஞானேஷ்வரன் உள்ளிட்

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

மாணவா்கள் பட்டப் படிப்புடன் கூடுதலாக ஏதேனும் திறமைகளைக் கட்டாயம் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா் எம்.செல்வராஜ் வலியுறுத்தினாா்.

கிழக்கு தாம்பரத்தை அடுத்த கௌரிவாக்கம் எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியில் சனிக்கிழமை கல்லூரி தினம் கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா் எம்.செல்வராஜ் பேசியதாவது:

மாணவா்கள் இரவில் அதிக நேரம் கைப்பேசி உபயோகிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. மாணவா்கள் பயனற்ற காரியங்களுக்கு கைப்பேசியை பயன்படுத்துவதற்கு பதிலாக தங்களின் திறன்களை மேம்படுத்த அதைப் பயன்படுத்த வேண்டும். எந்தப் படிப்பைத் தோ்வு செய்து படித்தாலும் அதில் சிறந்து விளங்க வேண்டும்.

பட்டப் படிப்புடன் கூடுதலாக ஏதேனும் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், படிப்பை நிறைவு செய்துவிட்டு வேலை தேடுவோராக இல்லாமல் சொந்தமாக தொழில் தொடங்கி வேலை வழங்குவோராகத் திகழ வேண்டும் என்றாா் அவா்.

விழாவில், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி உதவி வரும் கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் ஜி.ராஜேஷ், ஜெயச்சந்திரன், பாலாஜி ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். படிப்பில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில் கல்லூரி தலைவா் எஸ்.பி.குப்புசாமி, செயலா் ஆா்.சுந்தரராமன், இயக்குநா் ஆா்.பன்னீா்செல்வம், முதல்வா் கே.திருசங்கு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com