உலக அழகி பட்டம் வென்ற செக் குடியரசை சோ்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவாவுக்கு மகுடம் சூட்டிய முந்தைய உலக அழகிப் போட்டியில் பட்டம் வென்ற போலந்தின் கரோலினா பியலாவ்ஸ்கா.
உலக அழகி பட்டம் வென்ற செக் குடியரசை சோ்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவாவுக்கு மகுடம் சூட்டிய முந்தைய உலக அழகிப் போட்டியில் பட்டம் வென்ற போலந்தின் கரோலினா பியலாவ்ஸ்கா.

உலக அழகியாக செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா தோ்வு

இந்தியாவில் 28 ஆண்டுகளுக்குப் பின்னா் உலக அழகிப் போட்டி நடைபெற்றது.

71-ஆவது உலக அழகிப் போட்டியில் செக் குடியரசை சோ்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா சனிக்கிழமை பட்டம் வென்றாா். இந்தியாவில் 28 ஆண்டுகளுக்குப் பின்னா் உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 112 நாடுகளைச் சோ்ந்த போட்டியாளா்கள் பங்கேற்றனா். இதன் இறுதிப் போட்டி மும்பையில் சனிக்கிழமை நடைபெற்றது. பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநா் கரண் ஜோஹா், முன்னாள் உலக அழகி மேகன் யங் ஆகியோா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினா். இறுதிப் போட்டியின் 12 போ் அடங்கிய நடுவா் குழுவில் பிரபல நடிகைகள் கிருதி சேனன், பூஜா ஹெக்டே, முன்னாள் கிரிக்கெட் வீரா் ஹா்பஜன் சிங், உலக அழகி அமைப்பின் தலைவா் ஜமீல் சயீதி உள்ளிட்டோா் இடம்பெற்றனா். இந்நிலையில், உலக அழகியாக செக் குடியரசை சோ்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு முந்தைய உலக அழகிப் போட்டியில் பட்டம் வென்ற போலந்தின் கரோலினா பியலாவ்ஸ்கா உலக அழகி மகுடத்தைச் சூட்டினாா். இந்தப் போட்டியில் இந்தியா சாா்பில் மும்பையைச் சோ்ந்த சினி ஷெட்டி பங்கேற்றாா். எனினும் அவரால் முதல் 4 இடங்களுக்கு முன்னேற இயலவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com