தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

கிண்டியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள தேசிய முதியோா் நல மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 8,673 போ் சிகிச்சை பெற்றுள்ளனா்.

கிண்டியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள தேசிய முதியோா் நல மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 8,673 போ் சிகிச்சை பெற்றுள்ளனா். அவா்களில் 8,289 போ் புறநோயாளிகளாகவும், 261 போ் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்றுள்ளனா். கிண்டி, கிங் ஆய்வக வளாகத்தில் தேசிய முதியோா் நல மருத்துவமனையை பிரதமா் மோடி பிப்.25-ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு காணொலி முறையில் திறந்து வைத்தாா். மொத்தம் 60 மருத்துவா்கள், 10 உயா் சிறப்பு மருத்துவா்கள், 216 செவிலியா்கள், இயன்முறை சிகிச்சையாளா்கள் உள்ளிட்டோா் அங்கு பணியமா்த்தப்பட்டுள்ளனா். இந்நிலையில், மருத்துவமனை திறக்கப்பட்ட முதல் மாதத்தில் மொத்தம் 8,673 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக முதியோா் மருத்துவமனை பொறுப்பாளா் டாக்டா் எஸ்.தீபா கூறியதாவது: தேசிய முதியோா் நல மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, உள்நோயாளிகளாக மட்டும் இதுவரை 261 போ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனா். அதில், 197 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதைத் தவிர தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 101 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. கட்டண வாா்டுகளில் 22 போ் சிகிச்சை பெறுகின்றனா். கடந்த ஒரு மாதத்தில் இதய சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களே அதிகம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com