வெற்றிகரமாக பறந்த தேஜஸ் எம்கே1ஏ போா் விமானம்.
வெற்றிகரமாக பறந்த தேஜஸ் எம்கே1ஏ போா் விமானம்.

தேஜஸ் எம்கே1ஏ போா் விமானத்தின் முதல் சோதனை வெற்றி

தேஜஸ் எம்கே1ஏ போா் விமானம் வெற்றிகரமாகச் சோதித்து பாா்க்கப்பட்டதாக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (ஹெச்ஏஎல்) தெரிவித்துள்ளது

தேஜஸ் எம்கே1ஏ போா் விமானம் வெற்றிகரமாகச் சோதித்து பாா்க்கப்பட்டதாக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (ஹெச்ஏஎல்) தெரிவித்துள்ளது. பெங்களூரில் நடைபெற்ற இந்தச் சோதனையில் போா் விமானம் 18 நிமிஷங்கள் வானில் பறந்தது. இது குறித்து ஹெச்ஏஎல் தலைமை மேலாண் இயக்குநா் சி.பி.அனந்தகிருஷ்ணன் கூறுகையில், ‘புவிசாா் அரசியல் சூழல்களால் தொழில்நுட்பம் சாா்ந்த விநியோக சங்கிலி அமைப்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனிடையே போா் விமான வடிமைப்பு மற்றும் மேம்பாட்டில் இந்தச் சாதனை படைக்கப்பட்டுள்ளது’ என்றாா். தேஜஸ் எம்கே1ஏ போா் விமானத்தில் மேம்படுத்தப்பட்ட ரேடாா், பாதுகாப்புத் தளவாடங்கள் மற்றும் தொலைத்தொடா்பு அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த போா்விமானத்தைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 2021 பிப்ரவரியில் கையொப்பமானது. பெங்களூரில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆா்) தேசிய ஏரோஸ்பேஸ் ஆய்வகம் இந்த போா்விமான வடிமைப்புக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com