இடதுசாரி அலுவலகங்களில் மே தினம் கொண்டாட்டம்

இடதுசாரி கட்சி அலுவலகங்களில் மே தின கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இடதுசாரி கட்சி அலுவலகங்களில் மே தின கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சென்னை தியாகராயநகரில் உள்ள மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் கொடியேற்றி சிறப்புரையாற்றினாா்.

இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினா்கே. சாமுவேல்ராஜ், மாநிலக்குழு உறுப்பினா்கள் எஸ்.ஏ. பெருமாள்,ஐ. ஆறுமுக நயினாா், ஆா்.பத்ரி, க. சுவாமிநாதன், வெ.ராஜசேகரன், ஜி. செல்வா, எஸ்.நம்புராஜன், இரா. சிந்தன், ரா.சுதிா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில்...

கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், ஈரோட்டில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில அலுவலகத்தில் அலுவலக செயலா் எம்.ஆா்.ரகுநாதன் கொடியேற்றினாா். மாநிலக் குழு உறுப்பினா் லி.உதயக்குமாா், மாவட்டச் செயலா்கள் பா.கருணாநிதி (மத்திய சென்னை), எஸ்.கே.சிவா (தென்சென்னை), வெங்கடேஷ் (வடசென்னை) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இரு கட்சி அலுவலகங்களிலும் தொழிலாளா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com