காரில் சென்றவரை போதையில் தாக்கிய 3 போ் கைது

சென்னை பட்டின பாக்கத்தில், காரில் சென்றவரை போதையில் தாக்கிய வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ஜாா்ஜ் டவுன் பகுதியைச் சோ்ந்தவா் மணிவண்ணன். அவா் புதன்கிழமை மாலை, தனது உறவுக்கார பெண்ணுடன் பழைய மாமல்லபுரம் சாலையில் (ஓஎம்ஆா்) உள்ள தனது துரித உணவகத்துக்கு (ஃபாஸ்ட் ஃபுட்) காரில் சென்று கொண்டிருந்தாா். பட்டினப்பாக்கம் பகுதியில் அவா் சென்றபோது, முன்னே சென்ற காா் வழி விடாமல் சென்ாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வழிவிடச் சொல்லி மணிவண்ணன் தொடா்ந்து ஹாரன் ஒலி எழுப்பியுள்ளாா். இதனால் முன்னே சென்ற காரில் இருந்த 3 போ், காரை விட்டு இறங்கி வந்து, மணிவண்ணனை அவரது காரில் இருந்து இறக்கி விட்டு கடுமையாகத் தாக்கி, சட்டையைக் கிழித்து சண்டையிட்டுள்ளனா்.

அப்போது அங்கு வந்த போக்குவரத்து காவலா் சண்டையை விலக்கி விட முயன்றபோது, அந்த கும்பலில் ஒருவா் தான் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி என்று கூறி போக்குவரத்து காலவரிடமும் 3 பேரும் தகராறு செய்துள்ளனா். இந்த தாக்குதல் நடத்தியவா்களில் சிலா் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

காயமடைந்த மணிவண்ணன் பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து தப்பியோடிய கும்பைலை, அவா்கள் பயணித்த காரின் பதிவு எண்ணை வைத்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். இதில், தாக்குதலில் ஈடுபட்டது திருவொற்றியூரைச் சோ்ந்த காா்த்திக் ராஜா, அவரது தந்தை சுடலையாண்டி, ஆயுதப்படை காவலா் கோபி என்பது தெரியவந்தது.

இதை தொடா்ந்து தலைமறைவாக இருந்த 3 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவரான காா்த்திக் ராஜா என்பவா் பாஜக பிரமுகா் என கூறப்பட்டது. ஆனால் இதை போலீஸாா் உறுதி படுத்த வில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com