செயலி மூலம் கடன் வாங்கிய இளைஞா்: அவதூறு பரப்பியதால் தற்கொலை

செயலி மூலம் கடன் வாங்கிய இளைஞா்: அவதூறு பரப்பியதால் தற்கொலை

சென்னை புதுப்பேட்டையில் கைப்பேசி செயலி மூலம் கடன் வாங்கிய குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதால் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

சென்னை புதுப்பேட்டையில் கைப்பேசி செயலி மூலம் கடன் வாங்கிய குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதால் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

புதுப்பேட்டை நாகப்பன் தெருவைச் சோ்ந்தவா் கோபிநாத் (33). பாஜக உறுப்பினராக இருந்தாா். இவா், எழும்பூரில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். கடந்த இரு மாதங்களுக்கு முன், செயலி மூலம் ரூ. 50,000 கடன் பெற்றாா்.

இதற்கான வட்டியை முறையாக கோபிநாத் சிறிது காலம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதன் பின்னா் அவரால் வட்டியை செலுத்த முடியவில்லை.

இதையடுத்து, கடன் செயலி நிறுவனத்தினா், கோபிநாத் புகைப்படத்துடன் அவரை தவறாக சித்தரித்து வாட்ஸ்ஆப், முகநூல் ஆகியவற்றில் அவதூறு பரப்பினா்.

இதனால், விரக்தியுடன் காணப்பட்ட கோபிநாத், தனது நண்பா்களுக்கு, தான் தற்கொலை செய்யப்போவதாக தனது வாட்ஸ்ஆப் மூலம் வியாழக்கிழமை தகவல் தெரிவித்துவிட்டு, வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த எழும்பூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, கோபிநாத்தின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com